Saturday, January 12, 2013

pongal wishes

பொலிவுடனே பொங்கட்டும்
இவ்வாண்டுப் பொங்கல்!
நிரந்தரமாய் தங்கட்டும்
நிம்மதி நம் வீட்டில்!

பொல்லாத குணத்தை எல்லாம்
போகியிலே தீ வைப்போம்!
இல்லாத நற்குணங்கள்
இரவல் வாங்கி சேமிப்போம்!

உழவு இன்றி உலகம் இல்லை
என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே
உறுதியேற்று உதவுவோம்!

கதிரவனின் கருணைக்கு
நன்றி கூறும் நாளிது!
கரும்பு மென்று கவலை துப்பும்
களிப்புமிகு நாளிது!

குறைந்த செலவில் சிறந்த உணவு
பொங்கல் தவிர வேறில்லை!
வெங்காயமும் வெள்ளைபூண்டும்
இதற்குமட்டும் தேவையில்லை!

தைமகளின் பிறந்தநாளை
தமிழ் மணக்க போற்றுங்கள்!
குதுகலமாய் கொண்டாட உங்கள் அப்பாஸ் ன் வாழ்த்துகள்.. !

என்றுன் அன்புடன்..
அப்பாஸ்..
விரிவுரையாளர்/EEE..
பாண்டியன் பாலிடேக்னிக் காலேஜ்...
திருபத்தூர்..

No comments:

Post a Comment

Abbas M.E.,

Abbas M.E.,